புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரை சந்தித்த கொரோனா அவசர உதவிக்குழு அமைப்பு..!



புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியரை சந்தித்து கொரோனா அவசர உதவிக்குழு அமைப்பினர் மனு அளித்தனர்.


தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், எஸ்டிபிஐ மற்றும் UNWO ஆகிய அமைப்புகளின் பிரதிநிதிகளை கொண்டு கொரோனா அவசர உதவிக்குழு என்ற அமைப்பு சில நாட்களுக்கு முன் சென்னை தலைமையகத்தில் உருவாக்கப்பட்டது.

அதனடிப்படையில் கொரோனா அவசர உதவிக்குழு அமைப்பின் சார்பில் நேற்று 11.04.2020 புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. P.உமா மகேஸ்வரி அவர்களை சந்தித்து புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா ஒழிப்பில் அரசுடன் இணைந்து செயல்படுவது மற்றும் அரசிற்கு தேவையான உதவிகளை செய்வது என ஆலோசிக்கப்பட்டது.மேலும் மனு ஒன்றும் அளிக்கப்பட்டது.


இந்நிகழ்வில் மௌலவி S.A.ஜாஃபர் அலி (எ) சகாபர் உலவி (ஜமாஅத்துல் உலமா சபை),மௌலவி யஹ்யா கான் உலவி (ஜமாஅத்துல் உலமா சபை),A.ஜலீல் அப்பாஸ் (த.மு.மு.க), அப்துல் கனி (த.மு.மு.க),சையது அஹ்மது (SDPI), சலாஹுத்தீன் (SDPI), S.A. முஹம்மது அஷ்ரப் அலி (இ.யூ.முஸ்லீம் லீக்), P.S. அல்லா பிச்சை (இ.யூ.முஸ்லீம் லீக்), Dr.அஹ்மது மர்சூக், Dr.சலீம் அப்துல் குத்தூஸ் மற்றும் முஹம்மது யாகூப் (UNWO) உடனிருந்தனர். 
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments