புதுக்கோட்டை மாவட்டத்தில் மளிகை கடைகள் நாளை முதல் அனைத்து நாட்களிலும் இயங்கலாம்: கலெக்டர் அனுமதி



புதுக்கோட்டை மாவட்டத்தில் மளிகை கடைகள் அனைத்து நாட்களிலும் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை இயங்க கலெக்டர் உமாமகேஸ்வரி அனுமதி  அளித்து உத்தரவிட்டுள்ளார்.


புதுக்கோட்டை நகராட்சி, தெற்கு ராஜவீதியில் இயங்கும் மளிகை கடைகளில் பொதுமக்கள் சமூக இடைவெளியினை பின்பற்றப்படுவதை உறுதி செய்யும் வகையில் மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது.

கொரோனா வைரஸ் தடுப்பு பணியின் ஒரு பகுதியாக புதுக்கோட்டை  மாவட்டத்தில் மளிகை கடைகள் திங்கள், புதன் மற்றும் வெள்ளி கிழமைகளில் இயங்க அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்பொழுது இதனை தளர்த்தி அரசால் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை அனைத்து நாட்களிலும் மளிகை கடைகள் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. 

ஏனைய மருந்து, பால், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யப்படும் கடைகள் ஏற்கனவே அரசால் அறிவிக்கப்பட்டுள்ள கால அளவில் தொடர்ந்து இயங்கும்.  பொதுமக்கள் கண்டிப்பாக சமூக இடைவெளியை தொடர்ந்து கடைபிடித்திட வேண்டும். அந்தந்த கடைகாரர்களும் தங்கள் வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதை உறுதி செய்ய வேண்டும்..

வேளாண்மைத்துறையின் மூலம் நடமாடும் காய், கனி அங்காடிகள் 115 இடங்களில் பொதுமக்களின் இருப்பிடங்களுக்கே சென்று விற்பனை செய்யப்படுகிறது. அவ்வாறு விற்பனை செய்யப்படும்போது பொதுமக்களுக்கு இலவசமாக மாஸ்க் வழங்கப்படுகிறது. மேலும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் வேளாண்மைத்துறையின் மூலம் மாவட்டத்தின் 5 நடமாடும் வாகனங்கள் மூலம் உரவிற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தமிழக அரசால் பொதுமக்களின் நலனுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் உரிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி கூறினார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments