''தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற'' அரசு நிதியை எதிர்பார்க்காமல் சொந்த செலவில் குளத்தை தூர்வாரும் செந்தலை ஊராட்சி மன்ற தலைவர்.!



தஞ்சை மாவட்டம் செந்தலைப்பட்டினம் ஊராட்சியில் பதவியேற்ற நாள் முதல் இதுநாள் வரை பல பணிகளை செந்தலைப்பட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் அதிரடியாக செய்து வருகிறார்.

இந்நிலையில் அதன் தொடர்ச்சியாக பல வருடங்களாக கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள ஆண்டிக்குளம் பராமரிப்பின்றி காணப்பட்டது. இங்கு அதிகமான மக்கள் குளிப்பதற்கு பயன்படுத்தி வருகின்றனர். பல வருடங்களாக சுத்தம் செய்யாமலும், படித்துரை இடிந்தும் காணப்பட்டது. மக்கள் அனைவரும் ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே முடங்கிருக்கும் இந்த வேளையில் ஆண்டிக்குளத்தை சுத்தம் செய்து படித்துறை கட்ட ஊராட்சி மன்ற தலைவர் முடிவெடுத்தார். அதனடிப்படையில் குளத்தில் உள்ள நீர் வெளியேற்றப்பட்டு, குளத்தை தூர்வாரும் பணி மற்றும் படித்துறை கட்டும்பணி நடைபெற்று வருகிறது.


GPM மீடியா ஊராட்சி மன்ற தலைவரை தொடர்பு கொண்டபோது அவர் கூறியதாவது, செந்தலையை சேர்ந்த பொதுமக்கள் அதிகமானோர் இந்த குளத்தை குளிப்பதற்கு பயன்படுத்தி வருகின்றனர். இந்த ஆண்டிகுளத்தில் பல வருடங்காக வெளியேற்றப்படாமல் கெட்டுப்போயிருந்த தண்ணீரை வெளியேற்றி, குளத்தை தூர்வாரியும், படித்துறை கட்டி குளத்திற்கு மீண்டும் தண்ணீர் கொண்டு வந்து மக்களின் கஷ்டத்தை போக்க என்னுடைய சொந்த பொருளாதாரத்தை கொண்டு பணி செய்து வருகிறேன் என கூறினார்.


அப்பகுதி மக்கள் கூறுகையில் ஊராட்சி மன்ற தலைவராக பொறுப்பேற்ற குறுகிய காலத்தில் தேர்தல் சமயத்தில் அளித்த வாக்குறுதி கிணங்க எங்கள் ஊரில் பல நலத்திட்டங்களை செயல்படுத்தியும் பல வருடங்களாக சுத்தம் செய்யப்படாமல் இருந்து வந்த ஆண்டிகுளத்தை சுத்தம் செய்யும் பணியையும் மற்றும் படித்துறையை கட்டிவரும் ஊராட்சி மன்ற தலைவருக்கு பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறோம் என கூறினர். 


இது போன்று மக்கள் நலனில் அக்கறைகொண்டு செயல்பட்டு வரும் செந்தலை ஊராட்சி மன்ற தலைவர் ரஹ்மத்துல்லா அவர்களுக்கு GPM மீடியா வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.


கொரோனா வைரஸ் பரவலை தடுக்க`ஊர் நுழைவு வாயிலில் கிருமி நாசினி, சோப் போன்றவைகளை வைத்து தமிழகத்திற்க்கே முன்னுதாரணமாக களமிறங்கியவர்  செந்தலைப்பட்டிணம் ஊராட்சி மன்ற தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல்: அன்வர் அலி 
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments