கிருஷ்ணாஜிப்பட்டினம் மற்றும் P.R.பட்டினத்தில் வெறி நாய்களின் தொல்லை அதிகரிப்பு: நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை.!



கிருஷ்ணாஜிப்பட்டினம் மற்றும் P.R.பட்டினத்தில் வெறிநாய்கள் தொல்லையால் மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.


பொதுமக்கள் குடியிருக்கும் குடியிருப்பு பகுதிகளில் சமீப காலமாக அதிக அளவில் வெறிநாய்கள் சுற்றி திரிகின்றன. இதனால் குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் அச்சத்துடனே வெளியே செல்லும் நிலை உள்ளது.இந்த தெரு நாய்கள் ஒரு சில நேரங்களில் சிறுவர்கள் முதற்கொண்டு அனைவரையும் பதம் பார்க்க துணிந்து விடுகிறது.

இந்நிலையில் நேற்றைய தினம் P.R.பட்டினத்தில் உம்மல் ரய்னா என்ற மூதாட்டியை இரண்டு வெறி நாய்கள் சேர்ந்து கடித்து உள்ளது. இந்நிலையில் படுகாயமடைந்த மூதாட்டியை அருகில் இருந்தவர்கள் மணமேல்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

வெறிநாய்கள் கடிக்கும் போது ரேபிஸ் என்ற வைரஸ் கிருமி மனித உடலுக்குள் செல்கிறது. இந்நோய்க்கான தடுப்பு மருந்துகளின் விலை அதிகம் என்பதால் வசதியில்லாதவர்கள் பலர் உரிய சிகிச்சை மேற் கொள்வதில்லை. அரசு மருத்துவமனைகளில் தடுப்பு மருந்துகள் போதிய அளவில் இருப்பும் இருப்பதில்லை. ரேபிஸ் ஏற்படுத்தும் பாதிப்பு வெறி நாய் கடித்தவுடன் வைரஸ் கிருமி நரம்பு மண்டலத்தை பாதிக்கிறது.

முன்பெல்லாம் ஊராட்சி பகுதியில் சுற்றி திரியும் தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த அவற்றுக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்படும். இதில் ஊராட்சி நிர்வாகம் கவனம் செலுத்தாததால் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கிருஷ்ணாஜிப்பட்டினம் மற்றும் P.R.பட்டினம் பகுதியில் சுற்றி திரியும் தெருநாய்களின் தொல்லையை ஒழிக்க கிருஷ்ணாஜிப்பட்டினம் ஊராட்சி நிர்வாகம் தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என அப்பகுதிமக்களின் கோரிக்கையாக உள்ளது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments