அத்தியாவசிய பொருட்கள் வாங்க காலஅவகாசம் குறைப்பு; முதல் அமைச்சர் அறிவிப்பு.!பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்கும் காலஅவகாசம் குறைக்கப்பட்டு உள்ளது.


நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது.  இதனால் பொதுமக்கள் அத்தியாவசிய தேவை தவிர்த்து, பிற விசயங்களுக்காக வெளியே செல்லாமல் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர்.

அத்தியாவசிய பொருட்களான உணவு மற்றும் காய்கறி உள்ளிட்ட மளிகை பொருட்கள் போன்றவற்றை வாங்குவதற்கான காலநேரம் பற்றிய அறிவிப்பினை தமிழக அரசு வெளியிட்டது.

இதன்படி, அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்வதற்கான காலநேரம் காலை 6 மணியில் இருந்து மதியம் 2.30 மணிவரை இருக்கும் என்று முன்பு அறிவிக்கப்பட்டு இருந்தது.  

இந்த நிலையில், இந்த காலஅவகாசம் குறைக்கப்பட்டு உள்ளது என தமிழக அரசு புதிய அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.  அதனால், பொதுமக்கள் காலை 6 மணி முதல் மதியம் ஒரு மணிவரை தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கி கொள்ள அனுமதிக்கப்பட்டு உள்ளது.  பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க வரும்போது சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.

அரசின் விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல் அமைச்சர் பழனிசாமி எச்சரிக்கை விடுத்து உள்ளார்.  நோய் தொற்று உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கும்படி தனியார் மருத்துவமனைகளுக்கு அவர் அறிவுரை வழங்கியுள்ளார்.

இதேபோன்று, கொரோனா வைரஸ் ஜாதி, மத வேறுபாடின்றி அனைவரையும் தாக்க கூடியது.  அரசின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவோம் என மத தலைவர்கள் ஒப்புதல் அளித்து உள்ளனர்.  கொரோனா பாதிப்புக்கு மத சாயம் பூசுவது தவிர்க்கப்பட வேண்டும்.  மதம் சார்ந்த கூட்டங்களை தவிர்த்து, சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments