புதுக்கோட்டையில் முக கவசம் அணியாவிட்டால் ரூ.100 அபராதம்.! நகராட்சி ஆணையர் எச்சரிக்கை.!புதுக்கோட்டையில் முக கவசம் அணியாவிட்டால் ரூ.100 அபராதம் என நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.


புதுக்கோட்டை நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:- புதுக்கோட்டை நகராட்சி பகுதியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக அத்தியாவசிய பொருட்கள் வாங்க வரும் அனைவரும் தவறாமல் முக கவசம் அணிந்து வர வேண்டும், அவ்வாறு அணியாவிட்டால் ரூ.100 அபராதம் விதிக்கப்படும். மேலும் உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 

வர்த்தக நிறுவனங்களில் பணிபுரிவோர், காய்கறி வியாபாரிகள், மளிகை பொருட்கள் விற்பனை செய்பவர்கள், மருந்தகங்கள், ஓட்டல் நடத்துபவர்கள், வாகனம் ஓட்டுவோர், சாலையோர வியாபாரிகள், ஆவின் முகவர்கள் மற்றும் விற்பனையாளர்கள், பொதுமக்களுக்கு உதவி செய்யும் தொண்டு நிறுவனங்களை சேர்ந்த நபர்கள் உள்ளிட்ட அனைவரும் முக கவசம் மற்றும் கையுறை அணிய வேண்டும். தவறினால் பொது சுகாதார சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments