புதுக்கோட்டையில் வீட்டிலிருந்தபடியே மீன்கள் வாங்கலாம்: கலெக்டர் தகவல்.!புதுக்கோட்டை நகர் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் மீன்களை வீட்டிலிருந்தபடியே அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு உரிய விலை கொடுத்து பெற்று கொள்ளலாம் என்று கலெக்டர் உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஊரடங்கு  அமலில் உள்ளது.  புதுக்கோட்டை மாவட்டத்தில், கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் நோக்கோடு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்நோக்கத்தில் அத்தியவாசிய பொருட்களான பால், மருந்து, காய்கறி உள்ளிட்டவைகள் பொதுமக்களுக்கு கிடைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், மளிகை பொருட்களும் பொதுமக்களுக்கு கிடைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.  

இந்நிலையில், புதுக்கோட்டை நகர் பகுதிகளில் உள்ள பொதுமக்கள்  புரத சத்து மிகுந்த மீன்களை வீட்டிலிருந்தபடியே அலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு உரிய விலையில் வாங்கி கொள்ளலாம்.

அந்தவகையில் புதுக்கோட்டை  

எம்.பி.எஸ் பழனியப்பன் மீன்கடை 9443720654, 8903384654 என்ற அலைபேசி எண்ணிலும், 
ஆர்.ஆர்.பிரபாகரன் மீன்கடை, புதுக்கோட்டை. 9943921960, 9659870266 என்ற அலைபேசி எண்ணிலும்,
எம்.பி.எஸ். அண்ணாத்துரை மீன்கடை, புதுக்கோட்டை 9865920646 என்ற அலைபேசி எண்ணிலும், 
எம்.ஆர்.எஸ். பாஸ்கரன் மீன்கடை, புதுக்கோட்டை 9942940546, 6381496621 என்ற அலைபேசி எண்களின் 
மூலம் காலை 6 மணி முதல் 1 மணி வரை தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம்.

இதுதவிர புதுக்கோட்டை மாவட்டத்தில் இறைச்சி மற்றும் மீன்கடைகள் ஏற்கனவே இயங்கி வரும் நடைமுறையில் எவ்வித மாற்றமும் இல்லை.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments