100 நாள் வேலை திட்டம் - இனி சம்பளம் வீடு தேடி வரும்.!100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களின் வீடுகளுக்கே சென்று ஊதியம் வழங்கும்படி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.


ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பல்வேறு நிவாரணங்களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அந்த வரிசையில்,  விவசாயிகளுக்கு கடனுதவி வழங்க வேண்டும் என்றும் வங்கிகளை முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார். 

மேலும் 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களின் வீடுகளுக்கே சென்று சம்பளத்தை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள முதலமைச்சர் இந்த நடைமுறை மூன்று மாதங்களுக்கு தொடரும் என்று தெரிவித்துள்ளார்.  

இதுவரை 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களின் வங்கிக்கணக்கில் சம்பளம் வரவு வைக்கப்பட்டது. தற்போது பணியாளர்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமத்தை கருத்தில் கொண்டு, நேரடியாக பணத்தை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments