கோபாலப்பட்டிணம் வாசிகள் பெருநாள் கொள்முதல் செய்ய வெளியூர் செல்ல வேண்டாம்! கோபாலப்பட்டிணம் ஜமாஅத் நிர்வாகம் அறிவிப்பு!!கோபாலப்பட்டிணம் வாசிகள் பெருநாள் கொள்முதல் செய்ய வெளியூர் செல்ல வேண்டாம் என கோபாலப்பட்டிணம் ஜமாஅத் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தற்போது நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு, கொரோனா நோய் தொற்று வேகமாக பரவி கொண்டிருப்பதால், நமது ஜமாஅத்திற்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் சகோதர, சகோதரிகளே மற்றும் தாய்மார்களே எதிர்வரும் ரமலான் பெருநாள் கொண்டாட்டத்திற்கு வெளியூர்கள் சென்று புத்தாடைகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் வாங்குவதற்கு செல்ல வேண்டாமென கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

மேலும் வெளியூர்களுக்கு கொள்முதல் செய்வதற்கு செல்பவர்கள் அங்கு அரசு சொல்லும் தனி மனித இடைவெளியை கடைப்பிடிக்க முடியாமல் போகும் பட்சத்தில் கொரோனா நோய் தொற்று மேலும் பரவுதற்க்கு காரணமாக அமைந்துவிடும் என்பதாலும் இதன் மூலம் தான் கொரோனா தொற்று பரவியது என்றும் அல்லது நீங்கள் சென்ற கடையில் உள்ளவர்களுக்கு கொரோனா தொற்று இருந்ததாக கண்டுபிடிக்கப்பட்டது என்று சொல்லி உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் தனிமைப்படுத்தி பலவித கோணங்களில் சோதனைகளுக்கு உள்ளாக்கப்படுவீர்கள். 

இதனால் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் மற்றும் நமதூர் மக்களுக்கும் பலவித சோதனைகள் மற்றும் கஷ்டங்கள் ஏற்படலாம். எனவே மேலே குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்களை கவனத்தில் கொண்டு நமதூர் மக்களின் நலன், நாட்டு மக்களின் நலன் கருதி இந்த வருட பெருநாள் கொண்டாட்டத்திற்கான புத்தாடைகள் எடுக்க வெளியூர்களுக்கு செல்ல வேண்டாம் என பணிவன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இப்படிக்கு..
ஜமாஅத் நிர்வாகம், கோபாலப்பட்டிணம்.

தகவல்: ஜமாஅத் நிர்வாக குழு.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments