தொண்டியில் போதைக்காக மாத்திரை சாப்பிட்ட வாலிபர் உயிரிழப்பு.!திருவாடானை தாலுகா தொண்டி வடக்கு தெருவை சேர்ந்த சுல்தான் என்பவரது மகன் சதாம் உசேன் (வயது 25). இவர் தனது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து போதைக்காக அதிகஅளவில் மாத்திரைகளை சாப்பிட்டாராம். அதனை தொடர்ந்து மயங்கிய அவர் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு சென்று சதாம் உசேனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீஸ் துணை சூப்பிரண்டு புகழேந்தி கணேஷ் உத்தரவின் பேரில் தொண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் எழிலரசி வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார். இந்த வழக்கு தொடர்பாக மருந்துகடை உரிமையாளர் பிரபு, தொண்டி ஓடாவி தெருவை சேர்ந்த முகமது சியாத், மலுங்கு சாகிபு தெரு முகமது பயாஸ்தீன் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இறந்த சதாம் உசேனுக்கு திருமணமாகி 11 மாதங்களே ஆகிறது. தற்போது அவரது மனைவி நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments