புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய 153 பேர் கைது.!கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் பொதுமக்கள் வெளியே வரலாம் என்ற நிலையில் அதனை மீறி பலர் தேவையில்லாத காரணங்களுக்காக பொது இடங்களில் சுற்றிவருகின்றனர்.


அவ்வாறு புதுக்கோட்டை மாவட்டத்தில் தடை உத்தரவை மீறி தேவையில்லாமல் சுற்றித்திரிந்ததாக நேற்று முன்தினம் முதல் நேற்று வரை 127 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 153 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 1 கார், 47 மோட்டார் சைக்கிள்கள், 7 டீ பாய்லர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments