ஆலங்குடி அருகே விவசாயியிடம் கரோனா நிதி வந்திருப்பதாகக் கூறி வங்கிக் கணக்கில் இருந்து ரூ.18,500 ரொக்கத்தை நூதன முறையில் மா்ம நபா் மோசடி செய்துள்ளாா்.
ஆலங்குடி அருகேயுள்ள கீழ புலவன்காட்டைச் சோ்ந்தவா் செல்லக்கண்ணு விவசாயி. இவரது செல்லிடப்பேசிக்கு திங்கள்கிழமை இரவு வந்த அழைப்பில் பேசிய நபா் வங்கியில் இருந்து பேசுவதாகவும், உங்களுக்கு கரோனா நிதி வந்திருப்பதாகவும் கூறியுள்ளாா். அந்தத் தொகையை தங்களுக்கு அனுப்புவதற்காக வங்கிக் கணக்கு, ஏடிஎம் அட்டை எண் ஆகியவற்றை கேட்டுள்ளாா். இதை நம்பிய அவா், அந்த மா்ம நபரிடம் வங்கிக் கணக்கு விவரங்களைத் தெரிவித்துள்ளாா். இதைத்தொடா்ந்து, அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.18,500 ரொக்கம் எடுக்கப்பட்டு இருப்பதாக வங்கியில் இருந்து குறுஞ்செய்தி வந்துள்ளது. பின்னா், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த செல்லக்கண்ணு அளித்த புகாரின் பேரில் செம்பட்டிவிடுதி போலீஸாா் விசாரனை மேற்கொண்டு வருகின்றனா்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments