பார்க்கவ குல சங்கத்தின் சார்பில் அறந்தாங்கி எம்.எல்.ஏ. மீது போலீசில் புகார்.!புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பார்க்கவ குல சங்கத்தின் சார்பில் நேற்று ஒரு புகார் மனு அளிக்கப்பட்டது.


அதில், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வான ரெத்தினசபாபதி தங்கள் சமுதாயத்தினரை பற்றி இழிவாக பேசியதாகவும், சமூக வலைத்தளங்களில் அந்த ஆடியோ பரவி வருவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படியும், கூறப்பட்டிருந்தது.

இதற்கிடையே அந்த ஆடியோவில் தான் பேசவில்லை என்றும், தான் பேசியதை போன்று மிமிக்ரி செய்து பரப்பியதாகவும் கூறி, அவர்கள் மீது நடவடிக்கை கோரி ஏற்கனவே அறந்தாங்கி போலீஸ் நிலையத்தில் ரெத்தினசபாபதி எம்.எல்.ஏ. புகார் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments