கோவிலில் பன்றி இறைச்சி வீசிய சம்பவம்.! ஹரி என்பவர் கைது.!கோவையில் பன்றி இறைச்சியை கோவில் வாசலில் வீசிச்சென்ற ஹரி என்பரை போலீசார் கைது செய்தனர்.


கோவை சலீவன் வீதியில் உள்ள வேணுகோபால சாமி கோவில் மற்றும் ராகவேந்திரா கோவில் ஆகியவை அடுத்தடுத்து அமைந்துள்ளது. இந்த கோவில் வாசல் முன்பாக இன்று காலை அடையாளம் தெரியாத நபர்கள் பன்றி இறைச்சியை வீசி சென்றுள்ளனர். 

இந்நிலையில் காலை கோவிலுக்கு அருகில் இருப்பவர்கள் கோவில் படிகட்டுகளில் இறைச்சி வீசப்பட்டு இருப்பதை பார்த்து வெரைட்டி ஹால் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த இந்துத்துவ அமைப்பினரும் கோவில் வாசலில் பன்றி இறைச்சியை வீசி சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.சம்பவ இடத்தில் கோவை மாநகர காவல் துணை ஆணையர் பாலாஜி சரவணன் நேரில் விசாரணை மேற்கொண்டார். கோவில் அருகில் இருக்கும் சிசிடிவி காட்சிகளையும் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.

இதனையடுத்து கோவில் முன்பாக வீசப்பட்டு இருந்த இறைச்சி அகற்றப்பட்டு கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யப்பட்டது. இந்த சம்பவம் குறித்து வெரைட்டி ஹால் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட ஒரே குற்றவாளி ஹரி என்பவர் கோவை மாநகர காவல் துறையினரால் சம்பவம் நடந்த சில மணி நேரங்களில் கைது செய்யப்பட்டுள்ளார்.

நன்றி: தண்டோரா.காம்
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments