துபாய், சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு ஜூன் 3, 5-ந்தேதிகளில் சிறப்பு விமானங்கள்.!வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர ‘வந்தே பாரத்’ திட்டத்தின் முதற்கட்டமாக கடந்த 7-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டன.


2-ம் கட்டமாக கடந்த 16-ந்தேதி தொடங்கியது. இதில் ஜூன் 3-ந்தேதி துபாயில் இருந்து திருச்சிக்கு சிறப்பு விமானம் இயக்கப்படுகிறது. இதில் 178 இந்தியர்கள் திருச்சிக்கு வருகிறார்கள். 

இதுபோல் சிங்கப்பூரில் இருந்து 2 சிறப்பு விமானங்கள் புறப்பட்டு 5-ந்தேதி இரவு 9.45 மணிக்கும், இரவு 10.40 மணிக்கும் திருச்சிக்கு வந்தடைகிறது. 

பின்னர் முதலில் வந்த விமானம் அன்று இரவு 10.45 மணிக்கு சிங்கப்பூருக்கும், மற்றொரு விமானம் இரவு 11.20 மணிக்கு சென்னை வழியாக சிங்கப்பூருக்கும் புறப்பட்டு செல்லும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments