புதுக்கோட்டை மன்னர் கல்லூரி முதல்வர் உட்பட அரசு கல்லூரி முதல்வர்கள் இட மாற்றம்.!உயர்கல்வித் துறையின் முதன்மை செயலாளர் அபூர்வா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-


காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் முதல்வர் சி.திருச்செல்வம், புதுக்கோட்டை மன்னர் கல்லூரி முதல்வராகவும், புதுக்கோட்டை மன்னர் கல்லூரி முதல்வராக இருந்த ஜெ.சுகந்தி, திருச்சி பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி முதல்வராகவும் இடமாற்றம் செய்யப்படுகிறார்கள்.

அதேபோல் நெல்லை மண்டல கல்லூரி கல்வி இயக்ககத்தின் இணை இயக்குனர் கே.எஸ்.மீனா, காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரி முதல்வராக பணி நியமனம் செய்யப்படுகிறார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments