தமிழகத்தில் மே 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு - முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு.!



இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் மாதம் 24-ந்தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.


இந்த ஊரடங்கு ஏற்கனவே 3 முறை நீட்டிக்கப்பட்டது. மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு இன்றுடன் (ஞாயிற்றுக்கிழமை) முடிவுக்கு வருகிறது. இதற்கிடையே மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம், வேலைவாய்ப்பை கருத்தில் கொண்டு அவ்வப்போது ஊரடங்கு தொடர்பான பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.

இந்நிலையில் தமிழகத்தில் மே 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்து முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள உத்தரவில்,

*சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம் கடலூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு பொது முடக்கத்தில் எந்த தளர்வும் இல்லை.

*மெட்ரோ ரெயில், மின்சார ரெயில் ஆகியவற்றுக்கு தடை தொடரும்.

*தனியார், அரசு பேருந்துகளில் அதிகபட்சமாக 20 பேரும் வேன்களில் 7 பேரும் பயணிக்கலாம்.

*தங்கும் விடுதிகள், ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள் செயல்படுவதற்கான தடை தொடரும்.

* திருமண நிகழ்ச்சிகளுக்கு தற்போதுள்ள நடைமுறையே வரும் 31-ம் தேதி வரை தொடரும்.

*தஞ்சை, நாகை, தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர்,நீலகிரி மாவட்டங்களில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

*கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கரூர், நெல்லைதூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரிம் தேனி, மதுரை, சிவகங்கையில் புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று நள்ளிரவு 12 மணியுடன் பொதுமுடக்கம் முடியும் நிலையில் மே 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments