600 கி.மீ... 9 நாட்கள் பயணம்... 11 வயது சிறுவன் - மீண்டும் நெஞ்சை உறைய வைத்த சம்பவம்.!இந்த ஊரடங்கு காரணமாக அதிகம் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள். வெளிமாநிலங்களில் வேலை செய்து வந்த அவர்கள், இந்த ஊரடங்கின் காரணமாக வேலை இல்லாமல் சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டு வரும் சூழ்நிலைகளை நாம் தொடர்ந்து பார்த்து வருகின்றோம்.


இதனால் பலர் தங்களின் சொந்த ஊருக்கு பொடி நடையாக நடந்தே செல்கிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜோதி என்ற 15 வயது சிறுமி தன்னுடைய தந்தையை மிதிவண்டியில் அழைத்து கொண்டு 1200 கிலோ மீட்டர் பயணம் செய்து தங்களின் ஊருக்கு திரும்பிய செய்தி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. 

இந்நிலையில் பீகாரை சேர்ந்த இஸ்ராபில் என்பவர் வரணாசியில் உள்ள மார்பிள் கடையில் வேலை செய்து வருகிறார். அங்கு ஏற்பட்ட விபத்தில் அவர் கால் எலும்பு முறிந்துவிடவே கடந்த 40 நாட்களுக்கு மேலாக வாரணாசியிலேயே தன்னுடைய மகனுடன் இருந்துள்ளார். 

உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைக்காததால் தனது சொந்த ஊருக்கு செல்லும் பொருட்டு தனது மூன்று சக்கர வண்டியை எடுத்துக்கொண்டு தனது மகனோடு புறப்பட தயாரானார். ஆனால் அவரால் சில அடிகள் கூட வாகனத்தை இயக்க முடியாத நிலையில் அவரது மகனான 11 வயது சிறுவன் தபாராக் 9 நாட்கள் தொடர்ச்சியாக மூன்று சக்கர வாகனத்தை மிதித்துக்கொண்டு ஊர் திரும்பியுள்ளனர். இந்த செய்தி அப்பகுதியில் காட்டுத்தீ போல் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது. 
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments