புதுக்கோட்டையில் முன்விரோதம் காரணமாக பட்டப்பகலில் இளைஞர் பாட்டிலால் குத்தி படுகொலை.!



புதுக்கோட்டையில் முன்விரோதம் காரணமாக இன்று பட்டப்பகலில்  இளைஞர் பாட்டிலால் குத்தி  படுகொலை செய்யப்பட்டார்.


புதுக்கோட்டை நகர பகுதிக்கு உட்பட்ட அய்யனார்புரம் மூன்றாம் வீதியை சேர்ந்தவர் சொல்யூசன் என்ற தணேஷ்குமார்(27). இவர் மற்றும் இவருடன் நண்பர்கள் ஐந்து பேர் சேர்ந்து கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு போஸ் நகர் ஒன்பதாம் வீதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் தமிழரசன்(30) என்பவரை குடிபோதையில் அரிவாளால் வெட்டி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதில் தமிழரசன் படுகாயமடைந்து புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணம் அடைந்தார். இந்நிலையில் கணேஷ் நகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தமிழரசனை கொலை செய்ய முயற்சித்த தணேஷ்குமார் உள்ளிட்ட 5 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் இது தொடர்பான வழக்கு புதுக்கோட்டை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கடந்த மாதம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது பாதிக்கப்பட்ட தமிழரசன் நீதிமன்றத்தில் சாட்சி சொல்லியதாக கூறப்படுகிறது . மேலும் இந்த வழக்கில் நான்காவது குற்றவாளியாக தணேஷ்குமார் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் தமிழரசன் அய்யனார்புரத்திலுள்ள ஒரு பாழடைந்த கட்டிடத்தில் தங்கியிருந்துள்ளார்.  இதனை அறிந்த தணேஷ்குமார் அந்த இடத்திற்குச் சென்று தமிழரசனிடம் நீ எப்படி சாட்சி கூறலாம்? என்று தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.  இதனையடுத்து இருவருக்கும் தகராறு கைகலப்பாக மாறி அருகே இருந்த மது பாட்டிலை எடுத்து தமிழரசன் தணேஷ்குமாரை கழுத்து மற்றும் பல்வேறு இடங்களில் குத்தியும் கல்லை எடுத்து தலையில் போட்டுள்ளார். இதில் தணேஷ் குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனையடுத்து கணேஷ்குமாரை கொலை செய்த தமிழரசன் நேராக கணேஷ் நகர் காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்தார்.  கொலை செய்தவரும் கொலையானவரும் மதுபோதையில் இருந்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற நகர காவல் துணை கண்காணிப்பாளர் கோபாலச்சந்திரன் தலைமையிலான கணேஷ் நகர் போலீஸார் தணேஷ்குமாரின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.  

இந்நிலையில்  கொலை நடந்த இடத்தில் உயிரிழந்த தணேஷ்குமாரின் சகோதரர்கள் உறவினர்கள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் கூடி நின்று கூச்சலிட்டதால் கூட்டத்தை தடியடி நடத்தி போலீஸார் விரட்டி அடித்தனர் .இதனால் அந்த பகுதியில் பதட்டமான சூழல் நிலவியது .இதனையடுத்து அந்தப் பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும்  இதுதொடர்பாக புதுக்கோட்டை கனேஷ்நகர் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments