புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் கோடை உழவு மேற்கொள்ள கலெக்டர் வேண்டுகோள்.!



கோடை மழையின் ஈரத்தை பயன்படுத்தி நிலத்தை நன்கு உழவு செய்வதால் நன்மைகள் பல கிடைக்கின்றது. மேலும் மண்ணில் நல்ல காற்றோட்டம் கிடைக்கும்.


இதனால் மண்ணில் நுண்ணுயிரிகளின் செயல்பாடு அதிகமாகி மண்வளம் பெருகும். நிலத்தடியில் உள்ள கூண்டுப் புழுக்கள் மற்றும் தீமை செய்யும் பூச்சிகள் வெளியில் கொண்டுவரப்பட்டு அழிக்கப்படுகிறது. மிக முக்கியமாக மக்காச்சோளத்தை தாக்கும் அமெரிக்க படைப்புழுவினை கட்டுப்படுத்திட கோடை உழவு மிகவும் சிறந்தது. 

இதனால் வரும் பருவத்தில் பூச்சி நோய்த் தாக்குதல் பெருமளவு குறைகிறது. பல நன்மைகள் கோடை உழவினால் ஏற்படுவதால் “ கோடை உழவு கோடி நன்மை“ எனக் கூறப்படுகிறது. எனவே, புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் தற்போது பெறப்படும் கோடை மழையினை பயன்படுத்தித் தங்களது நிலங்களில் மழை நீரை சேமித்திடவும், பூச்சி நோய் ஆகியவற்றை கட்டுப்படுத்திடவும் விவசாயிகள் கோடை உழவு செய்து பயனடையலாம் என கலெக்டர் உமாமகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments