ராஜஸ்தான் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பணிபுரிந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 33 தொழிலாளர்கள், அவர்களது சொந்த ஊருக்கு திரும்ப விருப்பம் தெரிவித்திருந்தனர். அவர்கள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு உணவு, முக கவசம் உள்ளிட்டவைகள் வழங்கி உரிய சமூக இடைவெளியுடன் களமாவூரில் இருந்து பஸ் மூலம் திருச்சிக்கு கலெக்டர் உமாமகேஸ்வரி வழியனுப்பி வைத்தார். அங்கிருந்து ரெயில் மூலம் ராஜஸ்தான் செல்கின்றனர்.
மாவட்டத்தில் வெளிமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் 3,064 பேர் பணி செய்து வந்தனர். அதில் 21 மாநிலங்களை சேர்ந்த 1,800 பேர் தங்களது சொந்த மாநிலங்களுக்கு திரும்பி செல்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர். இதுவரை வெளிமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் 108 பேர் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மற்றவர்களை பல்வேறு கட்டங்களாக சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக கலெக்டர் உமாமகேஸ்வரி தெரிவித்தார். முன்னதாக வழியனுப்பு நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன், இலுப்பூர் கோட்டாட்சியர் டெய்சிகுமார், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் முத்தமிழ்செல்வன் உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments