ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியக்குழுவின் சாதாரண கூட்டம் ஒன்றிய அலுவலக கூட்ட அறையில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் செல்வி உமாதேவி தலைமை தாங்கினார். துணை தலைவர் பிரியாகுப்புராஜா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவகாமி, அசோகன் ஆகியோர் பேசினர். கூட்டத்தில், கவுன்சிலர்கள் சிவசங்கர், அல்லிமுத்து ஆகியோர் பேசுகையில், ஊராட்சி ஒன்றிய கூட்ட அறையில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி படம் வைக்க வேண்டும், என்றனர்.
கவுன்சிலர் ரமேஷ் பேசுகையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக வாங்கப்பட்ட ஸ்பிரேயர் விலை எவ்வளவு? ஒரு ஸ்பிரேயர் ரூ.14 ஆயிரமா? என்றார். அதற்கு ஒன்றிய ஆணையர் சிவகாமி, மாவட்ட நிர்வாகம்தான் எங்களுக்கு கொள்முதல் செய்து வழங்கியது. அவர்கள் கொடுத்த பில்லுக்குத்தான் நாங்கள் பணம் வழங்கினோம், என்றார். அதற்கு கவுன்சிலர் சிவசங்கர், மாவட்ட நிர்வாகம் அதிக விலை கொடுத்து ஸ்பிரேயர் கொள்முதல் செய்வதற்கு, கவுன்சிலர்கள் ஏன் அனுமதி வழங்க வேண்டும், என்றார்.
அதற்கு, நீங்கள் மாவட்ட நிர்வாகத்திடம்தான் கேட்க வேண்டும் என்று ஆணையர் தெரிவித்தார். மேலும் கவுன்சிலர்கள் தங்கள் பகுதிகளுக்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து பேசினர். இதையடுத்து தி.மு.க. கவுன்சிலர் வழங்கிய கருணாநிதி படத்தை அலுவலர்கள் கூட்ட அறையில் மாட்டினர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments