இடமில்லை எனக்கூறி பிரதமரை காக்க வைத்த ஹோட்டல் ஊழியர்!!!உணவகம் ஒன்றில் உணவருந்த இடமில்லாததால் காத்திருந்து உணவு சாப்பிட்டு சென்றுள்ளார் நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன்.


நியூசிலாந்து நாட்டின் பிரதமரான ஜெசிந்தா ஆர்டன், தனது இயல்பான மற்றும் எளிமையான குணத்திற்கு மக்கள் மத்தியில் பிரபலமானவர். அப்படிப்பட்டவரின்  எளிமையை மீண்டும் உலகுக்கு வெளிகொண்டுவந்துள்ளது வெலிங்டன்னில் நடைபெற்ற சம்பவம் ஒன்று. 

பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் தனது காதலர் கிளார்க் கேஃபோர்ட் உடன் கடந்த சனிக்கிழமை காலையில் வெலிங்டன்னில் உள்ள பிரபலமான உணவகம் ஒன்றிற்கு உணவருந்தச் சென்றுள்ளார். அந்நாட்டில் தற்போதுதான் கரோனா பரவல் குறைந்துள்ளது என்பதால் ஊரடங்கு தளர்த்தப்பட்டு, சமூக இடைவெளியை பின்பற்றுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக அவர் சென்ற உணவகத்தில் குறைவான நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர். அப்போது உணவருந்தச் சென்ற ஜெசிந்தாவை வரவேற்ற உணவக ஊழியர் ஒருவர், குறைவான நபர்களுக்கு மட்டுமே அனுமதி என்பதால் இடம் அனைத்தும் நிரம்பியுள்ளது. எனவே சிறிது நேரம் காத்திருங்கள் எனக் கூறியுள்ளார்.

இதனால் ஏமாற்றம் அடைந்த அவர் சிறிது நேரம் அங்கேயே காத்திருந்தார். பின்னர் இடம் கிடைத்தவுடன், அங்கே பணிபுரிந்த ஊழியர்கள் பிரதமரை உள்ளே அழைத்து அவருக்கு வேண்டிய உணவை கொடுத்துள்ளனர். இந்த செய்தி அந்நாட்டு ஊடகங்களில் வெளியாகி, பலரையும் வியப்பில் ஆழ்த்திய நிலையில், இந்த சம்பவத்தில் தங்கள் மீதுதான் தவறு உள்ளதாக ஜெசிந்தாவின் காதலன் சமூகவலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

முன்னேற்பாடுகள் இல்லாமல், டேபிள் எதுவும் புக் செய்யாமல் நேரடியாக சென்றதால்தான் இது நடைபெற்றதாக தெரிவித்துள்ளார். மேலும்,  நாட்டின் பிரதமராக இருந்தாலும் சமூக இடைவெளி உள்ளிட்ட நடவடிக்கைகள் அனைவருக்கும் பொதுவானதுதான் எனவும், எனவே உணவக ஊழியர்களுக்கு பாராட்டுகளை தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து உணவக ஊழியரின் செயலுக்கும், அதற்கு பிரதமர் ஆற்றிய எதிர்வினை குறித்தும் பல்வேறு தரப்பினரும் பாராட்டி பேசி வருகின்றனர். 
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments