ஒரே மாதத்தில் நிலைமை தலைகீழான ரஷ்யா.!



ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரே நாளில் 10,633 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.


உலககை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பாதித்த நாடுகளில் முதல் 10 நாடுகளில் ரஷ்யாவும் உள்ளது. ஆனால் கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளானவர்களை மிக குறைவான எண்ணிக்கையில் கொண்ட 2-வது நாடாக ரஷ்யா இருந்தது.

ஒரே மாதத்தில் அங்கு நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. தற்போது ரஷ்யாவில் கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. அதன்படி அந்த நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 34 ஆயிரத்தை கடந்து சென்று கொண்டிருக்கிறது.

அங்கு நேற்று ஒருநாளில் மட்டும் 10,633 -பேருக்கு புதிதாக கொரொனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இறப்பு எண்ணிக்கையும் 1280 ஆக அதிகரித்துள்ளதாகவும், தொற்று பாதித்தவர்களில் 50 சதவிகிதம் பேருக்கு எந்த அறிகுறியும் காணப்படவில்லை என்றும் ரஷ்ய அரசு தெரிவித்துள்ளது.co
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments