முன்கூட்டியே முடிவுக்கு வரும் மீன்பிடி தடை காலம்: மீனவர்கள் மகிழ்ச்சி!!தமிழகத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் ஜூன் 15 ஆம் தேதி வரையிலான 60 நாட்கள், மீன்களின் இனப்பெருக்க காலமாக கருதப்படுகிறது.


இந்தக் காலகட்டத்தில் கருவுற்ற மீன்கள், மீன் குஞ்சுகள் வலைகளில் சிக்கிக் கொண்டால் அவற்றின் இனப்பெருக்கம் பாதிக்கப்படும் என்பதால், விசைப்படகுகள் ஆழ்கடல் பகுதிகளில் மீன் பிடிக்க தமிழக அரசு தடைவிதித்துள்ளது.

ஆனால், இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில், மார்ச் 24 ஆம் தேதி முதல் ஏப்ரல் 10 ஆம் தேதி வரை, மீனவர்கள் கடலுக்கு செல்லக்கூடாது என்று மத்திய உள்துறை உத்தரவிட்டிருந்தது.

இதன் காரணமாக, வழக்கமான மீன்பிடி தடை காலத்துக்கு முன்பே 17 நாள்கள் மீனவர்கள் தொழிலுக்கு செல்லவில்லை. இந்த பொதுமுடக்க காலத்தையும் மீன்பிடி தடை காலமாக கருத வேண்டும் என்று பல்வேறு மாநில அரசுகளும், தேசிய மீனவர் பேரவை உள்ளிடட அமைப்புகளும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தன.

இந்த கோரிக்கையை ஏற்று, நிகழாண்டின் மீன்பிடி தடை காலம் வழக்கமான 61 நாட்களில் இருந்து 47 நாட்களாக குறைக்கப்படுவதாக மத்திய அரசு இன்று (மே 25) அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய மீன்வளத் துறை அமைச்சகம் பிறப்பித்துள்ள உத்தரவில், " கிழக்கு கடற்கரை பகுதி மீனவர்களுக்கான வங்க கடல் மீன்பிடி தடை காலத்தின் அளவு 61 நாட்களிலிருந்து 47 நாட்களாக குறைக்கப்படுகிறது.

இதேபோல், மேற்கு கடல் பகுதியில் ஜூன் 15 முதல் ஜூலை 31 வரை 47 நாட்களாக தடை காலம் குறைக்கப்பட்டுள்ளது. நிகழாண்டு மட்டும், ஆழ்கடலுக்கு சென்று மீன் பிடிக்கும் விசைப் படகு மீனவர்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தும்" என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த உத்தரவையடுத்து, தமிழகத்தில் வழக்கமாக ஜூன் 15 தேதி முடிவுக்கு வரும் மீன்பிடி தடை காலம் மே 31 தேதியுடன், முன்கூட்டியே முடிவுக்கு வருகிறது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments