மாற்று போதைக்கு அடிமையான வாலிபர் உயிரிழப்பு.!ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் வசந்தவேணி நகர் பகுதியை சேர்ந்தவர் கலீல் ரகுமான் என்பவரின் மகன் முகமது அசாருதீன் (வயது 27). இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 ஆண் குழந்தைகளும் உள்ளனர்.


இந்த நிலையில் ரம்ஜான் பண்டிகையையொட்டி மனைவி மற்றும் குடும்பத்தினர் சொந்த ஊரான தேவிபட்டினத்திற்கு சென்றுவிட்டனர். இதையடுத்து முகமது அசாருதீன் மொட்டை மாடியில் போதையில் தூங்கிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. நேற்று அனைவரும் வீட்டிற்கு திரும்பி வந்தபோது மாடியில் இருந்து முகமது அசாருதீன் வராததை கண்டு சந்தேகமடைந்த அவர்கள் மேலே சென்று பார்த்தனர். அங்கு அவர் இறந்த நிலையில் கிடந்துள்ளார். 

குடிப்பழக்கம் உள்ள இவர் ஊரடங்கால் டாஸ்மாக் கடை மூடப்பட்டபோது மதுபானம் கிடைக்காத சமயத்தில் மாற்று போதைக்கு அடிமையாகி வார்னிஷ் போன்றவற்றை முகர்ந்து பார்த்து அந்த வாசணை மூலம் போதை ஏற்றி கொண்டு படுத்து கிடப்பதை வழக்கமாக கொண்டிருப்பாராம். 

நேற்றும் அவரின் உடல் அருகில் வார்னிஷ் டப்பா கிடந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த ராமநாதபுரம் பஜார் போலீசார் அங்கு சென்று இறந்த முகமது அசாருதீனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments