புதுக்கோட்டை அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் தர்ணா.!திருவரங்குளம் அருகே கல்லுபள்ளம் கிராமத்தில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வந்தது. இந்த பகுதி கூலி தொழிலாளர்கள் அதிகம் வசிக்கின்ற பகுதி என்பதால் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றது.


இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அமைதியாக இருந்தனர். இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல் படி மீண்டும் கடை நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. இதைதொடர்ந்து நேற்று டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முககவசம் அணிந்து கடை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அப்போது கடையை மூடக்கோரி கோஷம் எழுப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த கணேஷ் நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments