புதுக்கோட்டை மாவட்டத்தில் பலத்த மழை.!



வங்க கடலில் உருவான உம்பன் புயல் தீவிரமான நிலையில், புதுக்கோட்டையில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. இரவு 8.30 மணியளவில் இடி மின்னலுடன் பெய்ய தொடங்கிய மழை இடைவிடாமல் ஒரே சீராக ஒரு மணி நேரத்திற்கு மேலாகவும் பெய்தது. மேலும் பலத்த காற்று வீசியது.


இந்த மழையினால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இரவில் திடீர் மின்தடை ஏற்பட்டது. புதுக்கோட்டையில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் உக்கிரம் அதிகமாக இருந்தது. 

இந்நிலையில், நேற்று இரவு பெய்த மழையில் பூமி குளிர்ந்தது. இதேபோல் மீமிசல், கோபாலப்பட்டிணம், கோட்டைபட்டினம், மணமேல்குடி, இலுப்பூர், வீரப்பட்டி, அன்னவாசல், சித்தன்னவாசல், குடுமியான்மலை, வயலோகம், முக்கண்ணாமலைப்பட்டி, ஆரியூர், மாங்குடி, பரம்பூர், கடம்பராயன்பட்டி, பணம்பட்டி, பெருஞ்சுனை உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. சாலையில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியது. இதனால் அன்னவாசல் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் தடைபட்டது. இதேபோல் அறந்தாங்கி, கீரனூர், பொன்னமராவதி, விராலிமலை, ஆலங்குடி உள்பட மாவட்டத்தின் பல இடங்களில் மழை பெய்தது. இந்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments