மும்பாலை அருகே நின்ற லாரி மீது சரக்கு வேன் மோதி டிரைவர் பலி.!திருச்சி காந்திமார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 40). சரக்கு வேன் டிரைவரான இவர் நேற்று காந்திமார்க்கெட்டில் இருந்து காய்கறிகளை ஏற்றிக்கொண்டு மணமேல்குடிக்கு வந்தார்.


பட்டங்காடு பகுதியில் கிழக்கு கடற்கரை சாலையில் வரும்போது எதிர்பாராதவிதமாக சாலையில் நின்ற லாரி மீது வேன் பயங்கரமாக மோதியது. இதில் சரக்கு வேனின் முன்பகுதி சேதம் அடைந்தது. வேனில் சிக்கி முருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். 

இது குறித்து மணமேல்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாமுவேல் ஞானம் வழக்குப்பதிவு செய்து சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக லாரியை நிறுத்தி இருந்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்த டிரைவர் காதர் என்பவரை கைது செய்தார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments