மது போதையில் தகராறு செய்த வாலிபர்.! கொலை செய்த தந்தை கைது.!ஊரடங்கினால் சென்னையில் இருந்து வந்து மது போதையில் தகராறு செய்த வாலிபர் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது தந்தை கைது செய்யப்பட்டார்.


ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா மங்கலக்குடி அருகே உள்ள துத்தாக்குடி கீழக்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர், பாண்டி (வயது 58). விவசாயி. அவருடைய மகன் தர்மதுரை (30). இவர் சென்னையில் மது பாரில் வேலைபார்த்து வந்தார்.

இந்த நிலையில் அவர் கொரோனா ஊரடங்கு காரணமாக சொந்த ஊருக்கு வந்திருந்தார். அவரது குடும்பத்தில் தகராறு இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டின் அருகே உள்ள வயல்காட்டில் ஆட்டுக் கிடையில் பாண்டி படுத்திருந்தாராம். அப்போது அங்கு குடிபோதையில் சென்ற தர்மதுரைக்கும் தந்தை பாண்டிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரம் அடைந்த பாண்டி அருகில் இருந்த அரிவாளால் மகன் தர்மதுரையை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த தர்மதுரை சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இதுகுறித்து தர்மதுரையின் தம்பி தினேஷ் அளித்த புகாரின் பேரில் திருவாடானை போலீசார் வழக்குப்பதிவு செய்து பாண்டியை கைது செய்தனர். கொலை செய்யப்பட்ட தர்மதுரைக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments