சவுதி அரேபியாவில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த தொழிலாளி கொரோனா பாதித்து உயிரிழப்பு.!



புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த நபர் கொரோனா பாதிப்பால்  சவுதி அரேபியாவில் உயிரிழந்தார். அவரின் சடலத்தைக்கூட  காண முடியாமல் மனைவி மற்றும் 3 பிள்ளைகள் கண்ணீர்விட்டு கதறியது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே ஆண்டிகுளப்பன்பட்டியை சேர்ந்தவர் கனிக்குமார்(44). . இவர் வறுமையின் காரணமாக சவுதி அரேபியா நாட்டில் கடந்த 15 ஆண்டுகளாக கிரேன் ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார்.

இவருக்கு திருமணமாகி தேன்மொழி என்ற மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளனர். இடையில் அவ்வப்போது சொந்த ஊருக்கு வந்து செல்லும் கனிக்குமார் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்து குடும்பத்தினரை பார்த்துவிட்டு மீண்டும் சவுதி அரேபியாவிற்கு பணிக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் கடந்த 40 நாட்களுக்கு முன்பு கனிக்குமார் கொரோனாவால் பாதித்கப்பட்டு அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில்  சிகிச்சை பலனின்றி கனிக்குமார் நேற்று உயிரிழந்ததாக அவருடன் பணியாற்றி வரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்  கனிக்குமாரின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர்  சோகத்தில் மூழ்கினர்.

கொரோனா பாதிப்பால் கனிக்குமார் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில் அவரது சடலத்தை கூட சொந்த ஊருக்கு கொண்டுவர முடியாத சூழலில் அவரது உறவினர்கள் தவிக்கின்றனர். கணவரின் முகத்தை கூட காணமுடியாமல் அவரது மனைவியும் தந்தையை பார்க்க முடியாமல்  அவரது 3 குழந்தைகளும் கண்ணீரோடு தவிக்கும் காட்சி காண்போரை கண்கலங்க வைக்கிறது.


இந்நிலையில் இறந்த கனிக்குமாரின் சடலத்தைகூட சொந்த ஊருக்கு கொண்டு வரமுடியாத சூழலில், அவரின் வருமானத்தை நம்பி மட்டுமே வாழ்ந்து வரும் அவரது மனைவி மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அரசு அவரின் குடும்பத்திற்கு உரிய நிவாரணத் தொகையை வழங்க வேண்டும் எனவும் அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments