GPM மீடியா வாசகர்களுக்கு நோன்பு பெருநாள் வாழ்த்து.!



இன்று 24/05/2020 ஈகைத் திருநாளை கொண்டாடும் வளைகுடா வாழ் மக்கள், தென் கிழக்கு ஆசியா வாழ் மக்கள் மற்றும் இந்திய மக்கள் மற்றும் GPM மீடியா வாசகர்கள் அனைவருக்கும் ஈகை பெருநாள் வாழ்த்துக்கக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

✴️பல இன்னல்களுக்கு மத்தியில் இறைவனின் அருள் நிறைந்த மாதமாம் ரமளான் என்னும் மாதத்தில் படைத்த ஏகனுக்காக ஒருமாத காலம் பசிந்திருந்தும், தாகித்திருந்தும் இரவிலே அவனை நின்று வணங்கியும் நாம் இருந்த காரணத்தினால்  இதோ இறைவன் அளித்த பரிசு  ஈகைப் என்னும் இன்ப நாள் இந்த அழகான நன்னாளில் எல்லா மகிழ்ச்சிகளும் நம் வாழ்கையில் பொங்கி வந்திட அல்லாஹ் அருள் புரிவானாக!!

ஈகைத் திருநாளை  கொண்டாடும்  சொந்தங்கள் அனைவருக்கும் GPM மீடியா சார்பாக இதயம் கனிந்த இனிய ஈகை பெருநாள் நல் வாழ்த்துக்கள்.

✴️ "தக்கப்பல்லல்லாஹூ மின்னா வ மின்கும் "

✴️"அல்லாஹ் எங்களிடமிருந்தும் உங்களிடமிருந்தும் நற்செயல்களை ஏற்றுக்கொள்வானாக...

ஃபித்ரா எனும் நோன்புப் பெருநாள் தர்மம்:

ஃபித்ரா எனும் தர்மம் கட்டாயம் நிறைவேற்ற வேண்டிய தர்மமாகும்.

✴️முஸ்லிமான ஆண்கள், பெண்கள், அடிமைகள், சிறுவர்கள் மீது இது கடமையாகும். முஸ்லிமான அடிமை, சுதந்திரமானவர், ஆண், பெண், பெரியவர் மற்றும் சிறுவர் மீது நோன்புப் பெருநாள் தர்மமாக ஒரு ஸாவு கோதுமை, அல்லது ஒரு ஸாவு பேரீச்சையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விதியாக்கினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) , நூல்: புகாரி 1503

✴️நோன்பாளியை [அவர் நோன்பில் செய்த] வீண் பேச்சு, வீண் செயல்களை விட்டும் சுத்தப்படுத்துவதற்காகவும், ஏழைகளுக்கு உணவாகவும் பித்ரா ஸகாத்தை நபி ஸல் அவர்கள் கடமையாக்கினார்கள். எனவே எவர் [பெருநாள்] தொழுகைக்கு முன்பே அதனை நிறைவேற்றுகின்றாரோ அது ஒப்புக் கொள்ளப்பட்ட ஜகாத்தாக ஆகும். எவர் தொழுகைக்கு பின் அதனை நிறைவேற்றுகிறாரோ அது பொதுவான தர்மங்களில் ஒரு தர்மமாக ஆகும். [அபூதாவுத்: 1609]

அன்புடன்:
GPM MEDIA TEAM
GOPALAPATTINAM
www.gopalappattinam.com
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments