புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட இஸ்லாமிய கலாச்சார பேரவை (IKP) சார்பில் ஃபித்ரா விநியோகம்.!புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட இஸ்லாமிய கலாச்சார பேரவை சார்பில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு வீடுவீடாக சென்று ஃபித்ரா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.


இஸ்லாமிய கலாச்சார பேரவை மாவட்ட செயலாளர் அப்துல் ஹமீது தலைமையில் மாவட்ட பொருளாளர் சேக் இஸ்மாயில் மாவட்ட துணைச் செயலாளர் ஒளி முகம்மது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


மாவட்ட செயலாளர் முனைவர் முபாரக் அலி ஃபித்ரா விளக்கஉரையாற்றினார். மாவட்ட துணைச் செயலாளர் அஜ்மீர் அலி ஃபித்ரா வினியோகத்தை துவக்கிவைத்தார்.

மருத்துவ அணிச்செயலாளர் பரக்கத் கனி. சுற்றுசூழல் அணிச்செயலாளர் சாகுல் அமீது, தொழில் நுட்ப அணிச்செயலாளர் முகம்மது ஹாலித் ஒன்றிய செயலாளர் நோக்கியா சாகுல், ஒன்றிய துணைச் செயலாளர் அலியார், ஒன்றிய பொருளாளர் நாகூர் கனி உள்ளீட்ட நிர்வாகிகள் சமூக இடைவெளியுடன்  கலந்துக்கொண்டனர். 


சுமார் 1,25,000 ரூபாய் மதிப்பிலான 2டன் அரிசி தேவை உடையவர்களுக்கு நகர மாணவரணி செயலாளர் சேக் பரீத் மற்றும் தொண்டரணிச் செயலாளர் கலந்தர் மைதீன் ஆகியோர் வீடுவீடாக கொண்டு சேர்த்தனர். அரிசியுடன் கொரோனா தடுப்பு முக கவசம் கொடுக்கப்பட்டது.முன்னதாக நகர பொருளாளர் அப்துல் கரீம் அனைவரையும் வரவேற்றார். இறுதியில்  நகர செயலாளர் ஜகுபர் சாதிக் நன்றி கூறினார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments