புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரே நாளில் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.!புதுக்கோட்டை கலீப்நகரில் ஏற்கனவே கொரோனா பாதித்தவரின் குடும்பத்தில் 55 வயதுடைய பெண், 29 வயதுடைய பெண், 9 வயது, 6 வயது சிறுவர்கள் ஆகி யோருக்கு நேற்று தொற்று உறுதியானது.


இதேபோல அதே பகுதியை சேர்ந்த 30 வயது இளம்பெண், 10 வயதான அவரது மகன் ஆகியோருக்கு தொற்று ஏற்பட்டது. மேலும் விராலிமலையை சேர்ந்த 32 வயது பெண், விராலூரை சேர்ந்த 23 வயது இளம்பெண், மாத்தூரை சேர்ந்த 55 வயது ஆண், 50 வயதான அவரது மனைவி, அறந்தாங்கி அழியாநிலையை சேர்ந்த 23 வயது வாலிபர், வல்லத்திராகோட்டையில் 30 வயது வாலிபர், ஆவுடையார்கோவிலில் 44 வயதான ஆண் ஒருவர் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியானது. 

இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக புதுக்கோட்டை ராணியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 101 ஆக உள்ளதாக கலெக்டர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்ட பட்டியலில் கூறப்பட்டிருந்தது.

இதற்கிடையில் அரிமளம் ஒன்றியம் கடியாபட்டி, ராயவரம், அரிமளம், ஏம்பல், சமுத்திரபட்டி உள்ளிட்ட கிராமங்களுக்கு சென்னை மற்றும் சிங்கப்பூரில் இருந்து வந்த 44 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் யாருக்கும் தொற்று இல்லை. 

கடியாபட்டியில் கொரோனா பாதித்த பெண்ணின் குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கும், அரிமளம் ஒன்றியத்திற்கு சென்னையில் இருந்து வந்த 43 பேருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவர்களின் சளி மற்றும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதற்கிடையில் எகிப்து நாட்டில் இருந்து வந்த ஆலங்குடி பாச்சி கோட்டையைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் ஆலங்குடியில் மாணவியர் விடுதியில் தங்க வைத்திருந்தனர். அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. 

இதேபோல சம்பட்டி விடுதியைச் சேர்ந்த ஒரு நபருக்கும், தவளை பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு நபருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. அவர்கள் ராணியார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments