புதுக்கோட்டை மாவட்டத்தில் வருவாய்த் தீர்வாயம்! (ஜமாபந்தி)



நோய் தொற்றை தடுக்கும் வகையில் பொது மக்கள்  ஜமாபந்திக்கான மனுக்களை இணையதளம் அல்லது  இ-சேவை மையம் மூலம் மட்டுமே  வழங்க வேண்டும். புதுக்கோட்டை மாவட்டத்தில் 1429-ஆம் பசலி  ஆண்டு வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) நடைபெற உள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் உமாமகேஸ்வரி விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து வருவாய் கிராமங்களிலும் கிராம நிர்வாக அலுவலர்களால் பராமரிக்கப்பட்டு வரும் வருவாய் கிராமக் கணக்குகளை ஒவ்வொரு வருடமும் அந்தந்த பசலியின் (வருடம்) இறுதி மாதத்தில்  மாவட்ட ஆட்சித் தலைவர் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் துணை ஆட்சியர்களால் தணிக்கை செய்யப்பட்டு வருகிறது.

அதேபோன்று  நடப்பு பசலி வருடத்திற்கு (1429) புதுக்கோட்டை மாவட்டத்தில் கீழ்கண்ட அலுவலர்களால் 22.06.2020 முதல் 1429-ஆம் பசலிக்கான கிராமக்கணக்குகள் தணிக்கை நடத்தப்படவுள்ளது.

1429-ஆம் பசலி  ஆண்டு வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் ஆலங்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வரும் 22 ஆம் தேதி வல்லநாடு உள்வட்டத்திற்கும், 23 ஆம் தேதி கீரமங்கலம் உள்வட்டத்திற்கும், 24 ஆம் தேதி வெண்ணாவல்குடி உள்வட்டத்திற்கும், 25 ஆம் தேதி ஆலங்குடி உள்வட்டத்திற்கும் வருவாய்த்தீர்வாயம் நடத்தப்படவுள்ளது.

இதேப்போல் புதுக்கோட்டை மாவட்ட வருவாய் அலுவலரால் அறந்தாங்கி வட்டாட்சியர் அலுவலகத்தில் வரும் 22 ஆம் தேதி அத்தாணி உள்வட்டத்திற்கும், 23 ஆம் தேதி நாகுடி உள்வட்டத்திற்கும், 24 ஆம் தேதி பூவத்தக்குடி உள்வட்டத்திற்கும், 25 ஆம் தேதி அரசர்குளம்  உள்வட்டத்திற்கும், 26 ஆம் தேதி சிலட்டூர் உள்வட்டத்திற்கும், 29 ஆம் தேதி அறந்தாங்கி உள்வட்டத்திற்கும்; வருவாய்த் தீர்வாயம் நடத்தப்படவுள்ளது.

சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர், நிலமெடுப்பு (தேசிய நெடுஞ்சாலை), புதுக்கோட்டை அவர்களால் குளத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வரும் 22 ஆம் தேதி நார்த்தாமலை உள்வட்டத்திற்கும், 23 ஆம் தேதி மாத்தூர் உள்வட்டத்திற்கும், 24 ஆம் தேதி கிள்ளுக்கோட்டை உள்வட்டத்திற்கும், 25 ஆம் தேதி குன்னண்டார்கோவில் உள்வட்டத்திற்கும், 26 ஆம் தேதி கீரனூர் உள்வட்டத்திற்கும் வருவாய்த் தீர்வாயம் நடத்தப்படவுள்ளது.

புதுக்கோட்டை வருவாய் கோட்ட அலுவலர்  அவர்களால் திருமயம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வரும் 22 ஆம் தேதி செங்கீரை உள்வட்டத்திற்கும், 23 ஆம் தேதி கீழாநிலை உள்வட்டத்திற்கும், 24 ஆம் தேதி கோட்டூர் உள்வட்டத்திற்கும், 25 ஆம் தேதி விராச்சிலை உள்வட்டத்திற்கும் 26 ஆம் தேதி திருமயம் உள்வட்டத்திற்கும்; வருவாய்த் தீர்வாயம் நடத்தப்படவுள்ளது.

இதேப்போல் இல்ப்பூர் வருவாய் கோட்ட அலுவலர் அவர்களால் விராலிமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் வரும் 22 ஆம் தேதி கொடும்பாளுர் உள்வட்டத்திற்கும் 23 ஆம் தேதி நீர்பழனி உள்வட்டத்திற்கும், 24 ஆம் தேதி விராலிமலை உள்வட்டத்திற்கும்  வருவாய்த் தீர்வாயம் நடத்தப்படவுள்ளது.

மேலும் கலால் மேற்பார்வை அலுவலர் கால்ஸ் இன்டஸ்ட்ரீஸ், கல்லாக்கோட்டை, அவர்களால் கந்தர்வகோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் வரும் 22 ஆம் தேதி புதுநகர் உள்வட்டத்திற்கும் 23 ஆம் தேதி கல்லாக்கோட்டை உள்வட்டத்திற்கும், 24 ஆம் தேதி கந்தர்வகோட்டை உள்வட்டத்திற்கும்  வருவாய்த் தீர்வாயம் நடத்தப்படவுள்ளது.

புதுக்கோட்டை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர், அவர்களால் கறம்பக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வரும் 22 ஆம் தேதி மழையூர் உள்வட்டத்திற்கும், 24 ஆம் தேதி கறம்பக்குடி உள்வட்டத்திற்கும்; வருவாய்த் தீர்வாயம் நடத்தப்படவுள்ளது.

இதேப்போல் புதுக்கோட்டை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர், அவர்களால் பொன்னமராவதி வட்டாட்சியர் அலுவலகத்தில் வரும் 22 ஆம் தேதி காரையூர் உள்வட்டத்திற்கும், 23 ஆம் தேதி அரசமலை உள்வட்டத்திற்கும், 24 ஆம் தேதி பொன்னமராவதி உள்வட்டத்திற்கும் வருவாய்த் தீர்வாயம் நடத்தப்படவுள்ளது.

மேலும் புதுக்கோட்டை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர், அவர்களால் ஆவுடையார்கோவில் வட்டாட்சியர் அலுவலகத்தில் வரும் 22 ஆம் தேதி பொன்பேத்தி உள்வட்டத்திற்கும், 23 ஆம் தேதி மீமிசல் உள்வட்டத்திற்கும், 24 ஆம் தேதி ஏம்பல் உள்வட்டத்திற்கும், 25 ஆம் தேதி ஆவுடையார்கோவில் உள்வட்டத்திற்கும் வருவாய்த் தீர்வாயம் நடத்தப்படவுள்ளது.

புதுக்கோட்டை தனித்துணை ஆட்சியர்  அவர்களால் மணமேல்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வரும் 22 ஆம் தேதி பெருமருதூர் உள்வட்டத்திற்கும் 23 ஆம் தேதி கோட்டைப்பட்டிணம் உள்வட்டத்திற்கும், 24 ஆம் தேதி சிங்கவனம் உள்வட்டத்திற்கும் 25 ஆம் தேதி மணமேல்குடி உள்வட்டத்திற்கும்  வருவாய்த் தீர்வாயம் நடத்தப்படவுள்ளது.

இதேப்போல் குன்னத்தூர் கலால் மேற்பார்வை அலுவலர் கால்ஸ் இன்டஸ்ட்ரீஸ்  அவர்களால் இலுப்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வரும் 22 ஆம் தேதி குடுமியான்மலை உள்வட்டத்திற்கும் 23 ஆம் தேதி சித்தன்னவாசல் உள்வட்டத்திற்கும், 24 ஆம் தேதி வீரப்பட்டி உள்வட்டத்திற்கும், 25 ஆம் தேதி இலுப்பூர் உள்வட்டத்திற்கும் வருவாய்த் தீர்வாயம் நடத்தப்படவுள்ளது.

புதுக்கோட்டை உதவி ஆணையர் (கலால்) அவர்களால் புதுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் வரும் 22 ஆம் தேதி வாராப்பூர் உள்வட்டத்திற்கும், 24 ஆம் தேதி புதுக்கோட்டை  உள்வட்டத்திற்கும்  வருவாய்த் தீர்வாயம்  நடத்தப்படவுள்ளது.

வருவாய்த் தீர்வாயம் குறிப்பிட்ட நாட்களில் காலை 10 மணிக்கு அந்தந்த வட்டாட்சியர் அலுவலகத்தில் துவங்கி நடைபெறும்.  கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறையில் உள்ள ஊரடங்கு உத்தரவை கருத்தில் கொண்டு பொது இடங்களில் 5 மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடுவதற்கும், பொதுமக்கள் கூட்டத்திற்கும்  தடை ஆணை விதிக்கப்பட்டுள்ளது. எனவே வருவாய்த் தீர்வாயம் முடிந்தவுடன் குடிகள் கூட்டம் நடைபெறாது.

எனவே கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுக்கும் பொருட்டு நேரடியாக மனுக்களை அனுப்புதலை தவிர்க்கவும் வரும் 29 ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 15.07.20 ஆம் தேதி வரை இணையதளம் வாயிலாகவோ அல்லது             இ-சேவை மையம் மூலம் மட்டுமே பொதுமக்கள்  அனைவரும் ஜமாபந்திக்கான தங்களது கோரிக்கை மனுக்களை சமர்ப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் அடுத்த மாதம் 15.07.20-க்கு பின் தீர்வு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் உமாமகேஸ்வரி விடுத்துள்ள செய்தி குறிப்பில் இத்தகவலை தெரிவித்துள்ளார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments