புதுக்கோட்டை மாவட்டத்தில் கலெக்டர் பி.உமாமகேஸ்வரி தலைமையில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சி.!புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் 1,429 ஆம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாய கணக்குகள், வருவாய் தீர்வாயம் குறித்த ஜமாபந்தி நிகழ்வு மாவட்ட கலெக்டர் பி.உமாமகேஸ்வரி, தலைமையில் இன்று (22.06.2020) நடைபெற்றது.


இந்நிகழ்வுக்கு பின் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது:- கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் மேற்கொள்ளப்படும் வருவாய் தீர்வாய கணக்குகளை முடிக்கும் வகையில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 1,429 ஆம் பசலி ஆண்டிற்கான ஜமாபந்தி நிகழ்ச்சி 22.06.2020 இன்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இன்றையதினம் ஆலங்குடி வட்டம், வல்லநாடு உள்வட்டத்திற்குட்பட்ட கோவிலூர், மாஞ்சன்விடுதி, கொத்தக்கோட்டை, வல்லதிராக்கோட்டை, வாண்டாக்கோட்டை, பூவரசக்குடி, திருவரங்குளம் மற்றும் வேப்பங்குடி ஆகிய பகுதிகளுக்கான ஜமாபந்தி நடைபெற்றது.

மேலும் 23.06.2020 அன்று கீரமங்கலம் உள்வட்டத்திற்கும், 24.06.2020 அன்று வெண்ணாவல்குடி உள்வட்டத்திற்கும், 25.06.2020 அன்று ஆலங்குடி உள்வட்டத்திற்கும் வருவாய்த்தீர்வாயம் நடைபெற உள்ளது. இந்த ஜமாபந்தி நிகழ்ச்சியில் பொது மக்களின் பல்வேறு கோரிக்கை மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட கலெக்டர் பி.உமாமகேஸ்வரி தெரிவித்தார்.

இந்நிகழ்வின் போது வட்டாட்சியர் கலைமணி, கோட்ட கலால் அலுவலர் கண்ணாகருப்பையா உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments