சிறையில் அடைக்கப்பட்டுள்ள கர்ப்பிணி சஃபூரா ஸர்கரை விடுவிக்க கோரி கோட்டைப்பட்டினத்தில் தமுமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.!புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் கோட்டைப்பட்டினம் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில்


மக்கள் விரோத சட்டமான CAA, NRC, NPR கண்டித்து போராடிய மாணவ செயல்பாட்டாளர் சஃபூரா ஸர்கரை கைது செய்த டெல்லி காவல்துறையை கண்டித்தும், கர்ப்பிணி சஃபூரா ஸர்கரை உடனே விடுதலை செய்யகோரியும் நேற்று 22.06.2020 கோட்டைப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் சமூக இடைவெளியுடன் பதாகைகள் ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கண்டன ஆர்ப்பாட்டத்தில் மீனவர் அணி மாநில செயலாளர் ஜெகதை செய்யது, புதுகை கிழக்கு மாவட்ட தலைவர் A. அபுசாலிகு, மருத்துவ அணி செயலாளர் MSK. சாகுல் ஹமீது, கழக உறுப்பினர்கள் மற்றும் இளைஞர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டனங்களை பதிவு செய்தனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments