புதுக்கோட்டை மாவட்ட பொதுமக்கள் தங்களின் குறைகளை மின்னஞ்சல் அல்லது வாட்ஸ்ஆப் எண்ணில் தெரிவிக்கலாம் - ஆட்சியர் தகவல்.!



பொது மக்கள் தங்களின் கோரிக்கை மனுக்களை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேரில் வராமலேயே வாட்ஸ்ஆப் அல்லது மின்னஞ்சலில் தெரிவிக்கலாம் என மாவட்ட கலெக்டர் பி.உமாமகேஸ்வரி அறிவுறுத்தியுள்ளார்.


இதுகுறித்து மாவட்ட கலெக்டர் பி.உமாமகேஸ்வரி தெரிவித்ததாவது:- கொரோனா வைரஸ் பரவுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக திங்கள் தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெறாத காரணத்தால், பொது மக்கள் தங்களின் கோரிக்கை மனுக்களை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேரில் வராமலேயே yseccoll.tnpdk@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது 9445008146 (http://wa.me/919445008146) என்ற வாட்ஸ் ஆப் எண்ணிற்கோ அனுப்பி வைக்க தெரிவிக்கப்படுகிறது.

மேலும் கோவிட்-19 தொடர்பாக வேறு இதர கோரிக்கை மனுக்களை pag.pdkt@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது 9445008146 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிற்கோ அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு மாவட்ட கலெக்டர் பி.உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments