அறந்தாங்கி திசைகள் மாணவ வழிகாட்டு அமைப்பின் சார்பில் பொதுமக்களுக்கு இலவசமாக முக கவசம் வினியோகம்.!



அறந்தாங்கியில் திசைகள் மாணவ வழிகாட்டு அமைப்பின் சார்பில் 2000 முக கவசங்கள் பொதுமக்களுக்கு இலவசமாக வினியோகம் செய்தனர்.


புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் பரவாமல்  தடுக்க அனைவரும் முக கவசம் அணிய வேண்டும். முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவித்துள்ளார்கள்.

எனவே சாமான்ய எளிய மக்களுக்கு முக கவசம் சென்று சேர அறந்தாங்கி திசைகள் மாணவ வழிகாட்டு அமைப்பு முதற்கட்டமாக 2000 விலையில்லா முக கவசங்களை பொதுமக்களுக்கு வினியோகம் செய்தனர்.


திசைகள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சேது புகழேந்தி தலைமையில் ஜலாலூதீன் மற்றும் அண்ணாத்துரை ஆகியோர் முன்னிலையில் அறந்தாங்கி வர்த்தக சங்க தலைவர் வழக்கறிஞர் வரதராஜன் அவர்கள் பொதுமக்களுக்கு முக கவசத்தை வழங்கி துவக்கிவைத்தார்.

பொருளாளர் முகமது முபாரக், பெரியய்யா, ராவுத்தர் கனி, அப்துல் கரீம், வீரப்பன், அப்துல் ரஹிம், ரஜினிகாந்த் ஆகிய திசைகள் அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் எவர் கீரீன் பள்ளி தாளாளர் முனைவர் முபாரக் அலி உள்ளிட்ட அனைவரும் முக கவசங்களுடனும் சமூக இடைவெளியுடனும்,  முக கவசத்தின் அவசியம் குறித்த கருத்துக்களை கூறி  பொதுமக்களுக்கு விலையில்லா முக கவசங்களை வினியோகம் செய்தனர். 

குறிப்பு: அறந்தாங்கி பேருந்து நிலையம் உள்ளே உள்ள நாகம்மாள் புக் ஸ்டாலில் தேவைப்படுவோர் தினமும் பெறும் வகையில் திசைகள் அமைப்பு வழிவகை செய்துள்ளது.


கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments