பிரசவத்திற்கு பின் சுயநினைவை இழந்த பெண்ணுக்கு புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் நவீன சிகிச்சை.! மருத்துவர்கள் சாதனை!மணமேல்குடி அருகே விச்சூர் பகுதியை சேர்ந்தவர் கிளாடிஸ் கீதா(வயது 31). இவருக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு ஆண் குழந்தை அறுவை சிகிச்சை மூலம் பிறந்தது.


இந்த நிலையில் மீண்டும் கர்ப்பமான கிளாடிஸ் கீதா கடந்த 10-ந் தேதி பிரசவத்திற்காக அறந்தாங்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. மறுநாள் அவருக்கு வயிற்றில் உள்ள பொருட்கள் மூச்சுப் பாதைக்குள் சென்றதால் மூச்சுவிட சிரமப்பட்டு மயக்க நிலைக்கு உள்ளானார். 

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவருக்கு டாக்டர்கள் சாய் பிரபா, கணேசன், பாலமுருகன், மகப்பேறு மருத்துவ பேராசிரியர் டாக்டர் அமுதா, மார்பக நோய் நிபுணர் டாக்டர் தாமோதரன் தலைமையிலான குழுவினர் சிகிச்சை அளித்தனர். இதில் நவீன சிகிச்சை மூலம் குணமடைந்து கிளாடிஸ் கீதா வீடு திரும்பினார். 

இது தொடர்பாக டீன் மீனாட்சி சுந்தரம் கூறுகையில், “சுயநினைவு இழந்த ஒரு பெண்ணை காப்பாற்றுவது என்பது எப்போதுமே மிகப்பெரிய சாதனை. அதிலும் பிரசவித்த ஒரு பெண்ணை போராடி காப்பாற்றியதன் மூலம் ஒரு குடும்பத்தினருக்கு இந்த மருத்துவர்கள் ஒளி ஏற்றி உள்ளனர் என்பது பெருமையாக உள்ளது. இது ஒரு கூட்டு முயற்சி” என்றார்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments