அறந்தாங்கி வர்த்தக சங்கத்தினர் மின் கட்டணத்தை தள்ளுபடி செய்ய கோரி மாவட்ட கலெக்டரிடம் மனு.!அறந்தாங்கி நகர வர்த்தக சங்கம் சார்பில் மாவட்ட கலெக்டரிடம் ஒரு கோரிக்கை மனு கொடுக்கப்பட்டுள்ளது.


அதில், கொரோனா முழு ஊரடங்கின் காரணமாக இரண்டு மாத காலம் வணிக நிறுவனங்கள் திறக்கப்படாமலேயே, மின்கணக்கீட்டில் இரண்டு மடங்கு தொகை செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது. 

உபயோகப்படுத்தாத இரட்டிப்பு மின் கட்டணத்தை பேரிடர் கால நிவாரணமாக முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். மேலும் நகராட்சி, அறநிலையத்துறை போன்ற துறைகளின் நிர்வாகத்தின் கீழ் உள்ள பஸ் நிலைய வணிக வளாகங்கள், கோவில் நிலங்களில் உள்ள வணிக வளாகங்களின் 2 மாத வாடகையையும் பேரிடர் கால நிவாரணமாக தள்ளுபடி செய்ய வேண்டும். 

தனியார் கட்டிடத்தில் இருக்கும் வாடகைதாரர்களுக்கு வாடகைக்கு உண்டான தொகையை பேரிடர் நிவாரண தொகையாக வழங்க வேண்டும், என்று கூறப்பட்டுள்ளது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments