கொரோனா எதிரொலி: கோட்டைப்பட்டினத்தில் கடைகள் அனைத்தும் இன்று முதல் அடைப்பு.! வர்த்தக சங்கம் அறிவிப்பு.!கோட்டைப்பட்டினத்தில் கடைகள் அனைத்தும் இன்று முதல் அடைக்கப்படுவதாக வர்த்தக சங்கம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் பகுதியில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதையொட்டி இன்று 01.07.2020 (புதன்கிழமை) முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடைகள் எதுவும் திறக்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் மருந்து கடைகள் மற்றும் பால் கடைகள் எப்பொழுதும் போல் திறந்திருக்கும் என்று கோட்டைப்பட்டினம் வர்த்தக சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எனவே ஊர் மக்களின் பாதுகாப்பு நலன் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தரும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் கடை அடைக்கப்படுவது குறித்து ஒலிபெருக்கி மூலம் மக்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments