விலையில்லா பாடப்புத்தகங்களை பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கும் பணி புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
இதனை முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி பார்வையிட்டார். அவர் கூறுகையில், 2020-21-ம் கல்வி ஆண்டிற்கான 1-ம் வகுப்பு முதல் 12 -ம் வகுப்பு வரையிலான விலையில்லா பாடப்புத்தகங்கள் தமிழ்நாடு பாடநூல் கழக வினியோக மையங்களில் இருந்து தேவையான எண்ணிக்கையில் வந்துள்ளன.
தற்போது அந்த பாடப்புத்தகங்களை பள்ளி தொடங்குவதற்கு முன்பு நேரடியாக அந்தந்த பள்ளிகளிலேயே வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.
இப்பணியில் ஈடுபடும் பணியாளர்கள் கொரோனா தொற்று ஏற்படாத வகையில் சமூக விலகலை கடைப்பிடித்து அரசால் தெரிவிக்கப்பட்டுள்ள விதிகளை பின்பற்றி முககவசம் மற்றும் கையுறைகள் அணிந்து பணிபுரிவார்கள், என்றார்.
அப்போது மாவட்ட கல்வி அலுவலர் ராஜேந்திரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்(உயர்நிலை) கபிலன், புதுக்கோட்டை கல்வி மாவட்ட பள்ளி ஆய்வாளர் குருமாரிமுத்து ஆகியோர் உடனிருந்தனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.