வீட்டில் இருந்து கொண்டே டயாலிஸிஸ் செய்யலாம் – புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் சாதனை.!



புதுக்கோட்டை மச்சுவாடி பகுதியை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 26). இவர் கடந்த 15-ந் தேதி சிறுநீரக கோளாறு காரணமாக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.


அவருக்கு டயாலிசிஸ் செய்து வந்த டாக்டர்கள், அவர் வீட்டிலேயே டயாலிசிஸ் செய்து கொள்ளும் வகையில் ஒரு மாற்று சிகிச்சையினை அளித்து சாதனை படைத்துள்ளனர்.

இது குறித்து மருத்துவமனை டீன் மீனாட்சிசுந்தரம் கூறுகையில், அருண்குமார் அனுமதிக்கப்பட்ட 3-ம் நாள் அவருக்கு மயக்க மருந்து கொடுத்து ஒரு சிறு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 

சிறுநீரக மருத்துவ நிபுணர் சரவணகுமார், சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் லதா, மயக்கவியல் டாக்டர்கள் சாய்பிரபா, பாலசுப்ரமணியம் ஆகியோர் அடங்கிய குழு இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டது. 

நடமாடும் பெரிடோனியல் டயாலிசிஸ் என்ற இந்த சிகிச்சையை புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல் முறையாக பெற்ற அவர் நேற்று ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டார். இந்த வெற்றிகரமான சிகிச்சையை சாதித்து காட்டியதன் மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஒரு மிகப்பெரிய பெயர் கிடைத்துள்ளது. 

இந்த கொரோனா காலத்தில் மருத்துவமனைக்கு அடிக்கடி வருவது இந்த சிகிச்சையின் மூலம் தவிர்க்கப்படுகிறது. மேலும் ஹீமோ டயாலிசிஸ் செய்து கொள்வதனால் ஏற்படும் பின் விளைவுகளும், குறிப்பாக நோய்த்தொற்று இதன்மூலம் தவிர்க்கப்படுகிறது.

ஒவ்வொரு நோயாளிக்கும் ஒரு லிட்டர் முதல் 3 லிட்டர் வரை டயாலிசிஸ் திரவங்கள் தேவைப்படலாம். ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் முதல் ரூ.1,200 வரை செலவாக கூடிய இந்த சிகிச்சை முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவசமாக செய்யப்பட்டுள்ளது. 

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 30 டயாலிசிஸ் எந்திரங்கள் 3 சுழற்சிகளில் இயங்கிறது. விரைவில் ராணியார் தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவமனையிலும் டயாலிசிஸ் வசதி செய்யப்படும், என்றார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments