நெற்றியில் குங்குமம் வைக்க மறுத்த மனைவியை விவாகரத்து செய்த கணவர்.!இந்து மத முறைப்படி குங்குமம் மற்றும் வளையல்கள் அணிந்துகொள்ள மறுத்த மனைவியை கணவர் விவாகரத்து செய்துள்ளார்.


அசாம் மாநிலம் கவுகாத்தியில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. தம்பதியினருக்கிடையே திருமணம் ஆன கடந்த 2012 ஆம் ஆண்டு முதலே பிரச்சனை இருந்துள்ளது.

மேலும் இந்து மதத்தில் திருமணமான பெண்கள் கண்டிப்பாக நெற்றியில் குங்குமம் வைக்க வேண்டும் மேலும் வளையல்களும் அணிய வேண்டும். அதுவே திருமணமான பெண்ணிற்கான அடையாளமாகும். ஆனால் மனைவி அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் அவர்களுக்குள் பிரச்சனை அதிகரித்துள்ளது. இதுகுறித்து மனைவி போலீசிலும் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில் தனது மனைவியிடமிருந்து தனக்கு விவாகரத்து வேண்டும் எனக்கேட்டு கீழ் குடும நீதிமன்றத்தை கணவர் அனுகினார். ஆனால் விவாகரத்து அளிக்க கீழ் குடும்ப நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதனை அடுத்து உயர்நீதிமன்றத்தை அணுகினார். அதில், மனைவி தன்னோடு திருமண வாழ்வை தொடர போதுமான ஒத்துழைப்பு தரவில்லை என்றும், திருமணமான பெண்கள் பின்பற்ற வேண்டிய குங்குமம் வைத்தல், வளையல்கள் அணிதல் போன்ற இந்து மத விதிகளை பின்பற்றவில்லை என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த கவுகாத்தி உயர்நீதிமன்றம், கணவரின் கோரிக்கையை ஏற்று விவாகரத்து அளித்து உத்தரவிட்டுள்ளது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments