புதுக்கோட்டையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து வாலிபர் சங்கத்தினர் நூதன ஆர்ப்பாட்டம்.!புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கிளை சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.


பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், விலை உயர்வை திரும்பப்பெற வேண்டும், ஊரடங்கு காலம் முடியும் வரை மின்சார கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும், சாத்தான்குளம் சம்பவத்தில் நீதி வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இதில், ஒரு மோட்டார் சைக்கிளுக்கு மாலை அணிவித்து இறுதி சடங்கு நடத்துவதை போல், சங்கு ஊதியும், தாரை தப்பட்டை அடித்தும் நூதன முறையில் வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் நாராயணன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகள் தொடர்பாக கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் வாலிபர் சங்கத்தினர், இந்திய மாணவர் சங்கத்தினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments