கோட்டைப்பட்டினம் பொதுமக்களுக்கு ஓர் முக்கிய வேண்டுகோள்.!!!



சென்னையில் இருந்து கோட்டைப்பட்டினத்திற்கு வருகை தரும் பொதுமக்கள் கவனத்திற்கு.


கடந்த 04/07/2020 சனிக்கிழமையன்று மேலத் தெருவில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு புதுகை அரசு ராணியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களின் வீட்டைச்சுற்றி வசித்துவந்த ஏபி அபுபக்கர் உட்பட தாமாகவே முன்வந்து பரிசோதனை செய்து கொண்ட (11நபர்கள் மேலத்தெருவை சேர்ந்தவர்கள் உட்பட) அனைவருக்கும் நெகட்டிவ் என்று இன்று முடிவு வந்துள்ளது.

எனவே பாதுகாப்பு நலன் கருதி தடை செய்யப்பட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருக்கக்கூடிய பொதுமக்களும், பாதிக்கப்பட்ட நபர் உடன் நெருக்கமாக இருந்தவர்களும் மற்றும் சென்னையில் இருந்து யாரும் வந்திருந்தாலும் தாங்களாக முன்வந்து சுகாதாரத்துறை எடுக்கக்கூடிய பரிசோதனைக்கு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்து ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தகவல்:
F.முகம்மது லாபிர் OHTO
கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை குழு
கோட்டைப்பட்டினம் ஊராட்சி
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments