புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்யக்கோரி மனு!



தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் யூசுப்ராஜா புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு அளித்தார்.


அதில், தமிழக சிறைகளில் பத்து ஆண்டுகளுக்கு மேலாக வாடிக்கொண்டிருக்கும் ஆயுள் தண்டனை கைதிகளை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும். சட்டமன்றத்தில் பலமுறை நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 30 ஆண்டுகளாக சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்ய வேண்டும், என்று கூறப்பட்டிருந்தது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments