புதுக்கோட்டை மாவட்டத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்: புகார் தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு.!புதுக்கோட்டை மாவட்டத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 1098 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். மேலும் மாவட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பிற்காக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு செயல்பட்டு வருகிறது. இந்த அலகிற்கு குழந்தைகள் சம்பந்தமான புகார்களை தெரிவித்து தீர்வு காணலாம்.


பெண்களுக்கு ஏற்படும் குடும்ப வன்முறைகளை குறைப்பதற்கு ஆலோசனை வழங்குவதற்காகவும், உதவி செய்வதற்காகவும் மாவட்ட சமூகநல அலுவலக பாதுகாப்பு அலுவலரின் 6383089492 என்ற செல்போன் எண்ணிலோ, குடும்ப நல ஆலோசகரின் 9566306500 என்ற செல்போன் எண்ணிலோ, ஒன் ஸ்டாப் சென்டர் மைய நிர்வாகியின் 9849891308 என்ற செல்போன் எண்ணிலோ மற்றும் முதுநிலை ஆலோசகரின் 9600622046 என்ற செல்போன் எண்ணிலோ தொடர்பு கொண்டு ஆலோசனை மற்றும் உதவிகள் பெறலாம்.

மேலும், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ், அங்கன்வாடி பணியாளர்களை ஒருங்கிணைப்பாளர்களாக செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

எனவே, பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்கள் பகுதிக்கு அருகில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அங்கன்வாடி பணியாளர்களின் செல்போன் எண்களை தொடர்பு கொள்வதற்கு www.icds.tn.nic.in என்ற இணையதளத்தில் KNOW YOUR DPOS/CDPOS/SUPERVISORS AWWS/AWHS/AWCS என்ற பிரிவை தேர்வு செய்து தங்களது பகுதிக்கு உட்பட்ட அங்கன்வாடி மைய பணியாளர்களின் செல்போன் எண்கணை பெற்று தங்களது புகார்களை தெரிவிக்கலாம், என்று கலெக்டர் உமா மகேஸ்வரி தெரிவித்தார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments