கொரோனா வார்டுகளில் வாக்கி டாக்கி வசதி: அசத்தும் புதுக்கோட்டை போலீஸ்!!புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவமனையில் சிறப்பு பிரிவில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 


நான்கு தளங்களில் சிகிச்சை அளிக்கப்படுவதாலும், 200 நோயாளிகள் இருப்பதாலும் டாக்டர், நோயாளிகளுக்கு இடையேயான தொடர்பு மிகவும் கடினமாக இருந்தது. இதை சரி செய்வதற்காக போலீசாரின் உதவியுடன் 4 வாக்கி டாக்கிகள் பெறப்பட்டுள்ளன. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார், அந்த வாக்கி டாக்கிகளை, அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் மீனாட்சிசுந்தரத்திடம் வழங்கினார். 

பின்னர் டாக்டர் மீனாட்சிசுந்தரம் கூறுகையில், தகவல் தொடர்பு என்பது இந்த பேரிடர் காலத்தில் மிகவும் இன்றியமையாதது. இந்த வாக்கி டாக்கிகளின் மூலம் டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் நோயாளிகளுக்கு இடையேயான தொடர்பு மேம்படும். மேலும் ஒரு குறிப்பிட்ட அறையில் உள்ள நோயாளிகளிடம் உரையாட வேண்டும் என்றால் அங்கு செவிலியர் இந்த வாக்கி டாக்கி வைத்து நோயாளிகள் அதைத் தொடாமல் தொடர்பினை ஏற்படுத்திக் கொள்ளும் வகையில் இந்த வசதி இருப்பது குறிப்பிடத்தக்கது. 

விரைவில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் இந்த வசதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும், என்று தெரிவித்தார். நிகழ்ச்சியின் போது உதவி நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் ரவிநாதன் உடனிருந்தார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments